படப்பிடிப்பில் அந்த ஹீரோ என்னை...பகிர்ந்த பிரபல நடிகை

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
sanjana galrani says hero torture her movie shooting
Published on

சென்னை,

வாழ்க்கையில் பல துன்புறுத்தலைச் சந்தித்துள்ளதாகவும் அதை எதிர்கொண்டு முன்னேறியதால் தான் இந்த நிலையில் இருப்பதாகவும் நடிகை சஞ்சனா கல்ராணி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், ஒரு கன்னட படத்தின் படப்பிடிப்பின் போது ஹீரோ தன்னை காயப்படுத்தியதாக சஞ்சனா கூறினார்

அவர் கூறுகையில், ஒரு கன்னட படத்தில் நடிக்கும்போது எனக்கு சங்கடமாக இருந்தது. பெயர் சொல்ல விரும்பவில்லை. அந்த படத்தில் ஹீரோ என்னை காயப்படுத்தினார். அவர் அந்தப் படத்தோட இயக்குனரிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது நடந்த ஒரு காட்சியின் படப்பிடிப்பின்போது ஹீரோ என் கைகளை இறுக்கமா பிடித்தார். ஆனால், அந்தக் காட்சியில, ஹீரோ என் கைகளைப் பிடித்து முன்னாடி அழைத்து செல்ல வேண்டும். ஆனால், அவர் கோபமாக இறுக்கமாக என் கையை பிடித்து கசக்கினார்.

நான் வலிக்கிறது என்று சொன்னேன். அவர் கேட்கவில்லை. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினேன் . நான் அடி வாங்க வரவில்லை, இது ஆக்சன் சீன் இல்லை, நான் வில்லியும் இல்லை என்று கூறினேன். அந்த மாதிரி சிலர் இருப்பார்கள். அவங்களைப் புறக்கணித்து விட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com