விஜய் சேதுபதியின் 52-வது படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
Santhosh Narayanan to compose music for Vijay Sethupathi's 52nd film
Published on

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 52-வது படத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதற்கிடையில் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளநிலையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com