எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்'பில் மோசடி- நடிகை அதிதி ராவ்

தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்துள்ளார்.
எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்'பில் மோசடி- நடிகை அதிதி ராவ்
Published on

சென்னை,

காற்று வெளியிடை', செக்கச்சிவந்த வானம்', சைக்கோ', ஹே சினாமிகா' படங்களில் நடித்தவர் அதிதிராவ். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகரான சித்தார்த்தை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட அதிதிராவ், தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி வாட்ஸ்-அப்' மூலமாக போட்டோகிராபர்களை மர்ம நபர் தொடர்புகொண்டு, நான் பேசுவது போல போட்டோஷூட்' குறித்து பேசிவருகிறார்.

அது நான் இல்லை. என் பர்சனல் எண்ணில் இருந்து நான் எப்போதுமே இப்படி தொடர்புகொள்ள மாட்டேன். எனது பணிகளை கவனிக்க தனி குழுவினர் உள்ளார்கள். எனவே அது நான் இல்லை. என் பெயர் சொல்லி அப்படி பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்'', என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com