"ஒன்ஸ் மோர்" படத்தின் 2-வது பாடல் அப்டேட்

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "ஒன்ஸ் மோர்" 2-வது பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
"ஒன்ஸ் மோர்" படத்தின் 2-வது பாடல் அப்டேட்
Published on

சென்னை,

தமிழில் 'மாஸ்டர், கைதி, விக்ரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ். இவர் 'அநீதி, ரசவாதி, போர்' போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு 'ஒன்ஸ் மோர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

ரொமான்டிக் காதல் கதைகளத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைத்திருக்கிறார். அரவிந்த விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இந்த படத்தில் இருந்து 'இதயம்' எனும் இரண்டாவது பாடல் நாளை மாலை 5:30 மணி அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த இதயம் பாடலுக்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com