''மதராஸி'' படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சீமான்


Seemans review of the film Madharaasi
x
தினத்தந்தி 9 Sept 2025 10:45 PM IST (Updated: 9 Sept 2025 10:45 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மதராஸி’ படம் கடந்த 5-ம் தேதி வெளியானது

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மதராஸி’ படத்திற்கு சீமான் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில்,

''ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கி அன்பு தம்பி சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் ''மதராஸி'' படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சிவாவுக்கு இது ஒரு முழு நீள ஆக்சன் படம். சண்டை காட்சிகளெல்லாம் ரொம்ப அசாத்தியமாக இருந்தது. வியப்பாக இருந்தது.

இதற்கு முன்பு வெளியான அமரன், இதுவரை அவர் நடித்து வெளியான படங்களிலிருந்து அவரை வேறுமாதிரி காண்பித்தது. அதன்பிறகு தம்பி சிவாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிணாமமாக நான் உணர்கிறேன். ஒரு ஆக்சன் படத்திற்குள் நல்ல காதலை இணைத்து சொன்னது ரொம்ப புதியதாக இருந்தது. தம்பி அனிருத்தின் பங்களிப்பு அசாத்தியமானது. எல்லாருடைய பங்களிப்புமே ரொம்ப சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டை பயிற்ச்சியாளர்களை சொல்ல வேண்டும். ரொம்ப அருமையாக பண்ணிருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னுடைய பாராட்டுகள்'' என்றார்.

1 More update

Next Story