தென்னிந்திய ஹீரோக்களுக்கு ஷாருக்கான் வைத்த கோரிக்கை

விஜய், பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய ஷாருக்கானின் கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன
துபாய்,
தென்னிந்திய நடிகர்களான விஜய், பிரபாஸ், மகேஷ் பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன், யாஷ் உள்ளிட்ட நடிகர்கள் பற்றிய ஷாருக்கானின் கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாருக்கான், தென்னிந்திய நட்சத்திரங்கள் சிலருடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், , "எனக்கு தென்னிந்தியாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, விஜய், ரஜினி சார், கமல் சார். அவர்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. அவர்கள் வேகமாக நடனமாடுவதை நிறுத்த வேண்டும். அவர்களுடன் இணைந்து நடனமாடுவது எனக்கு கடினமாக இருக்கிறது' என்றார்.
Related Tags :
Next Story