'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 3' - இரண்டு வேடங்களில் நடிக்கும் ஷனாயா கபூர்?


Shanaya Kapoor to Play Double Role in Student Of The Year 3?
x

கரண் ஜோஹர் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்’ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’.

மும்பை,

நடிகை ஷனாயா கபூர், தனது முதல் படம் கைவிடப்பட்ட பிறகு, தற்போது சந்தோஷ் சிங் இயக்கி வரும் 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' படத்தில் விக்ராந்த் மாஸ்ஸியுடன் நடித்து வருகிறார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில், இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கரண் ஜோஹர் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'. இதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு வெளியான 2-ம் பாகத்தை புனித் மல்கோத்ரா இயக்கி இருந்தார்.

தற்போது இதன் 3-ம் பாகம் உருவாக இருக்கிறது. இது 6 எபிசோடுகளை கொண்ட வெப் தொடராக உருவாகிறது. இதனை அறிமுக இயக்குனர் ரீமா மாயா இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ஷனாயா கபூர் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் வருகிற 20-ம் தேதி அதற்கான படப்பிடிப்பில் அவர் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story