விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சுக்கு சண்முக பாண்டியனின் பதில்

விஜய்காந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸ் ஆனது.
சென்னை,
நேற்று மதுரையில் நடைபெற்ற தவெக-வின் 2 மாநாட்டில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை , விஜய், அண்ணன் என அழைத்திருந்தநிலையில், அது குறித்து விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் சில கருத்துகளை தெரிவித்தார்.
விஜய்காந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸ் ஆனது. இதனை சண்முக பாண்டியன் திரையரங்குக்கு வந்து பார்த்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைய தவெக மாநாட்டில் விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சுக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், ''விஜய்க்கு அப்பா(விஜயகாந்த்) அண்ணன், அதனால் அண்ணன் என்று சொன்னார். அவ்வளவுதான். இதில் பெரிதாக பார்க்க எதுவும் இல்லை. அப்பா விஜய்யை சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கிறார். விஜய் அப்பாவை அண்ணன் என்று கூப்பிட்டு பழகி விட்டார். அதனால் அப்படி அழைத்தார். அப்பா எப்போதும் மக்கள் சொத்துதான்'' என்றார்.






