'அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு' - நடிகை காஷிகா கபூர்


Sharing screen space with Allu Arjun will be dream come true Entertainment
x

’ஆயுஷ்மதி கீதா மெட்ரிக் பாஸ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் காஷிகா கபூர்

சென்னை,

கடந்த ஆண்டு வெளியான 'ஆயுஷ்மதி கீதா மெட்ரிக் பாஸ்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் காஷிகா கபூர்.இப்படத்தில் அவர் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டைத்தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, தெலுங்கில் கடந்த 4-ம் தேதி வெளியான படம் 'லவ் யுவர் பாதர்'. இப்படத்தின் மூலம் காஷிகா கபூர் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் ஸ்வீட்டி என்ற காதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இவரது அடுத்த படம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"அல்லு அர்ஜுன் சார், தான் நடிக்கும் படங்களுக்கு கொடுக்கும் அர்ப்பணிப்பு உண்மையிலேயே எனக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எந்த சிரமமுமின்றி செய்கிறார். என்றாவது ஒருநாள் அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு' என்றார்.

1 More update

Next Story