46 வயதாகும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் ஷில்பா ஷெட்டி


46 வயதாகும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் ஷில்பா ஷெட்டி
x

தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார், ஷில்பா ஷெட்டி.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ஷில்பா ஷெட்டி, 50 வயதிலும் ‘சிக்' என்ற உடற்கட்டுடன் இளம் நடிகைகளுக்கும் சவாலாக திகழ்கிறார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். அவரும் நடிகை தான். 46 வயதாகும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதற்கிடையில் தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார், ஷில்பா ஷெட்டி. இதனை நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘இதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்பேன். எனது தங்கைக்காக தான் இதை கேட்கிறேன் என அவர்களிடம் சொல்வேன். இதைவிட கொடுமை என்னவென்றால், ‘டேட்டிங்' தொடர்பான செயலியில் சேர்ந்துகொள் என்று கூட என் தங்கையிடம் சொல்லியிருக்கிறேன்'' என்றார்.

1 More update

Next Story