

சென்னை,
நடிகை ஸ்ரேயா ரெட்டி தனது சிறந்த நடிப்பு மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார். சலார் மற்றும் ஓஜி படங்களின் மூலம் பிளாக்பஸ்டர்களைப் பெற்றார். இவர் ஒரு நல்ல உடற்பயிற்சி ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில், பவன் கல்யாணும் அவரது உடற்தகுதியைப் பாராட்டினார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில், ஸ்ரேயா ரெட்டி, உடற்பயிற்சி தனக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பின் போது ஷாட்டுக்குச் செல்வதற்கு முன்பு கிடைக்கும் இடைவெளியியில் ஓடுவதாகவும் அல்லது சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதாகவும் கூறினார். அவ்வாறு செய்யும்போது, தன்னை அறியாமலேயே தன்னம்பிக்கை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
சாலார் படப்பிடிப்பின் போது கூட, ஒவ்வொரு ஷாட்டுக்குச் செல்வதற்கு முன்பும் 50 முதல் 60 தண்டால்கள் எடுத்தாக கூறினார்.