தமன்னாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


Sidharth-Tamannaah’s folk thriller Vvan locks release date
x

இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மும்பை,

சித்தார்த் மல்ஹோத்ரா, தமன்னா நடிக்கும் 'வ்வான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் படம் 'வ்வான்'. பாலாஜி டெலிபிலிம்ஸ் மற்றும் டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story