கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க, உஷாரா இருங்க விஜய் அண்ணா - “திருப்பாச்சி” பட நடிகை


கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க, உஷாரா இருங்க விஜய் அண்ணா  -  “திருப்பாச்சி” பட நடிகை
x
தினத்தந்தி 19 Oct 2025 6:56 PM IST (Updated: 19 Oct 2025 6:58 PM IST)
t-max-icont-min-icon

‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மல்லிகா விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கியுள்ளார்.

பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை மல்லிகா நடித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் குறித்து நடிகை மல்லிகா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே விஜய் சார் பத்திதான் வீடியோ வருது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசிருக்காங்க. நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி ஆரம்பிச்சி மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரிஞ்சது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல. நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா" என்று விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

2002ம் ஆண்டு மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மல்லிகா. அதன்பின்னர் இயக்குநர் சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராப் படத்தில் நடிகைகளில் ஒருவராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க, அஜித்துடன் திருப்பதி, ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும், தோட்டா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் சென்னையில் ஒரு நாள்.

1 More update

Next Story