ராமேசுவரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் ராமேசுவரம் சென்றிருந்தார்.
ராமேசுவரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
Published on

ராமேசுவரம்,

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், அவர் 'கோவா' திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். பின்னர். ரஜினியின் 'கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

இந்த நிலையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, அவருடைய கணவர் விசாகனுடன் சென்றிருந்தார். அவர்கள் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளுக்கு சென்று தீர்த்தமாடினர். பின்னர் விநாயகர், விசுவநாதர், சுவாமி, அம்பாள், நடராஜர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளில் கணவருடன் சவுந்தர்யா தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமேசுவரம் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகும். எனவே, இங்கு வந்து தரிசித்தது மிகுந்த மனநிறைவை தருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com