35 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் - ராமதாஸ் கண்டனம்

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.
சேன்னை,
தமிழகத்தைச் சார்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
’’கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. மீனவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 பேரும் இலங்கை கடற்படை கட்டுபாட்டில் உள்ளதாக அறியப்படுகிறது. தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்து வருகின்ற சம்பவங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அனைத்து மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனே எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து இது போன்ற கைது சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களின் மீன் பிடி தொழிலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






