'நான் ராமாயணத்தில் சீதையாக நடிக்காமல் போனதற்கு யாஷ்தான் காரணம்' - கே.ஜி.எப் நடிகை


Srinidhi Shetty reveals she was not selected for this biggie
x
தினத்தந்தி 25 April 2025 12:47 PM IST (Updated: 25 April 2025 12:56 PM IST)
t-max-icont-min-icon

கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

ஐதராபாத்,

தமிழ், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. தொடர்ந்து தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது இவர் நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்பட புரமோசனில் பல சுவாரசியமான தகவல்களை ஸ்ரீநிதி பகிர்ந்தார். அதன்படி, ரன்பீர் கபூரும் சாய் பல்லவியும் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடித்து வரும் ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடிக்க ஆடிஷனில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

தயாரிப்பாளர்களுக்கு தனது நடிப்பு பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கேஜிஎப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த யாஷ், இந்த படத்தில் ராவணனாக நடிப்பதால் அவரை நடிக்க வைக்கவில்லை என்பதையும் பகிர்ந்தார். மேலும், சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி பொருத்தமாக இருப்பார் எனவும் பாராட்டினார்.


1 More update

Next Story