'டாக்ஸிக்' படப்பிடிப்பை துவங்கிய நயன்தாரா?


star heroine starts filming for the Yash starrer
x

நடிகர் யாஷ் நடித்து வரும் படம் ’டாக்ஸிக்’

பெங்களூரு,

கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 படங்களின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் யாஷ் நடித்து வரும் படம் 'டாக்ஸிக்'. இது இவரது 19-வது படமாகும். இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

மேலும், இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகை நயந்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story