இந்த நடிகரின் 50-வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?


Star hero’s 50th film to be directed by Mari Selvaraj?
x

மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக கருப்பு படத்துடன் திரைக்கு வர உள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது 50வது படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்திலும், ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 47-வது படத்திலும் நடித்து வருகிறார். மறுபுறம், மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் படத்தை இயக்கி வருகிறார்.

1 More update

Next Story