நவம்பர் மாதம் வருகிறதா 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5?


Stranger Things 5 out in November?
x

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5-ன் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

சென்னை,

ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். சமீபத்தில், இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது.

5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து 2025-ம் ஆண்டு சந்திப்போம் என்று தெரிவித்தது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் நவம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story