'அப்படிப்பட்டவர்கள் பூமிக்கு சுமை, அவர்களை...’- நடிகை பிரகதி

சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பங்கேற்று பல பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளை நடிகை பிரகதி வெளிப்படுத்தினார்.
சென்னை,
தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை 'பிரகதி', சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பங்கேற்று பல பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், சமூகத்தில் நடக்கும் அநீதிகள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்து ஆழ்ந்த கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
சமூகத்தில் குற்றங்களைச் செய்பவர்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக அட்டூழியம் செய்பவர்கள் , "பூமிக்கு சுமை" என்று கூறினார். அத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டப்பூர்வ தண்டனைகளை விட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களை "பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மக்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டும், குற்றவாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.






