’அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது’ - தமன்னா

தனக்கு மிகவும் வெறுப்பு தரும் விஷயங்களைப் பற்றி தமன்னா சமீபத்தில் மனம் திறந்து பேசினார்.
’அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது’ - தமன்னா
Published on

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சில வருடங்களாக தனி பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்காக உருவாக்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர்.

இதற்கிடையில், தனக்கு மிகவும் வெறுப்பு தரும் விஷயங்களைப் பற்றி தமன்னா சமீபத்தில் மனம் திறந்து பேசினார். தவறுகளை மன்னிக்க முடியும், ஆனால் தன் முகத்திற்கு நேராக பொய் சொன்னால் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று அவர் கூறினார்.

"யாராவது என் முகத்துக்கு நேராகப் பொய் கூறி, நான் அதை நம்பும் அளவுக்கு முட்டாள் என நினைப்பது எனக்கு மிகவும் கோபத்தை கொடுக்கிறது" என்று தமன்னா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com