பவன் கல்யாணின் அடுத்த படம்...பேச்சுவார்த்தையில் பிரபல தமிழ் இயக்குனர்?


Tamil Director in talks to direct Pawan Kalyan’s next
x

பவன் கல்யாண் புதிய ஸ்கிரிப்ட்களை தீவிரமாகக் கேட்டு வருவதாகக் தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பவன் கல்யாண் சமீபத்தில் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த ''ஹரி ஹர வீரமல்லு'' மற்றும் ''ஓஜி'' ஆகியவற்றை விரைவாக முடித்துவிட்டு, தற்போது ஐதராபாத்தில் ''உஸ்தாத் பகத் சிங்'' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் எந்த படத்திலும் கையெழுத்திடவில்லை. அரசியல் ஈடுபாடு காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடும் என்று கூறப்பட்டாலும், புதிய ஸ்கிரிப்ட்களை தீவிரமாகக் கேட்டு வருவதாகவும் தெரிகிறது.

அதன்படி, தமிழ் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி சமீபத்தில் பவனைச் சந்தித்து ஒரு கதையைச் சொன்னதாக தெரிகிறது. பவன் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும், இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் அலைகளை உருவாக்கி வருகிறது.

பவன் கல்யாண் இதற்கு முன்பு சமுத்திரக்கனி இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ''புரோ'' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story