சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை படைத்த தமிழ் திரைப்படம் ’ஆக்காட்டி’


சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை படைத்த தமிழ் திரைப்படம் ’ஆக்காட்டி’
x
தினத்தந்தி 26 Nov 2025 6:48 PM IST (Updated: 26 Nov 2025 8:08 PM IST)
t-max-icont-min-icon

படத்தின் டைரக்டர் ஜெய் லட்சுமி உள்ளிட்டோர் விருதை பெற்றனர்.

கோவா,

56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை தமிழ் திரைப்படமான ஆக்காட்டி திரைப்படம் வென்று சாதனை படைத்துள்ளது. படத்தின் டைரக்டர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் , ஒலி வடிவமைப்பாளர் மற்றும் காஸ்டிங் இயக்குநர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

ஆக்காட்டி முதல் படமான டைரக்டர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story