''உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி'' - கமல்ஹாசன்

தக் லைப் படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறது.
சென்னை,
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறது. அதில் கமல்ஹாசன் பேசுகையில்,
'' நான் பார்த்த இளைஞர் மணி இன்று சினிமா ஞானியாக இருக்கிறார். அவருடன் பணிபுரிவது எனக்கு குதூகலமாக இருந்தது. சர்வதேச தரத்தில் 'தக் லைப்' உருவாகியுள்ளது.
உயிரே, உறவே, தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன். உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. ஆனால், அது 'தக் லைப்' படத்தை பற்றியது கிடையாது. ஆனால், அதை பற்றி பேச நேரம் ஒதுக்குவது தமிழனாக என்னுடைய கடமை ' என்றார்
Related Tags :
Next Story






