அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அதுதான் காரணம்...அப்டேட் கொடுத்த அட்லீ

இயக்குனர் அட்லீ, அல்லு அர்ஜுன் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார்.
சென்னை,
''புஷ்பா 2 தி ரூல்'' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கிறார்.
('AA22xA6') என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், தற்போது குழு அபுதாபிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், இயக்குனர் அட்லீ இப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,
’AA22xA6 படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் மிகவும் புதியதாக இருக்கும். ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் மற்றும் ஜவான் மீதான ரசிகர்களின் அன்புதான் இதைச் செய்ய வைத்தது. இப்படத்தில் ஹாலிவுட் குழுவினருடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதுவரை மக்கள் பார்க்காத ஒன்றை நாங்கள் கொடுப்போம்’ என்றார்.






