அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் 2வது லுக் வெளியானது


அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் 2வது லுக் வெளியானது
x
தினத்தந்தி 27 Jun 2024 1:26 PM GMT (Updated: 27 Jun 2024 1:30 PM GMT)

அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.'குட் பேட் அக்லி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த சூழலில் 'குட் பேட் அக்லி' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி இன்று மாலை அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.



Next Story