''தி டார்க் நைட்'' பட தமிழ் ரீமேக் - ஜோக்கராக விஜய் சேதுபதி...பேட்மேனாக யார் தெரியுமா?

இயக்குனர் புஷ்கர் காயத்ரி ''தி டார்க் நைட்'' படத்தில் ஜோக்கராக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பேன் என கூறினார்.
சென்னை,
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் புஷ்கர் காயத்ரி ''தி டார்க் நைட்'' படத்தை தமிழில் ரீமேக் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால் அதில் பேட்மேனாக நடிக்கத் தகுதியானவர் அஜித்தான் என்றும் ஜோக்கராக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பேன் எனவும் கூறினார்.
இயக்குனர் புஷ்கர் காயத்ரி, அஜித்துடன் படம் பண்ண உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தநிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
''தி டார்க் நைட'' 2008-ல் வெளிவந்த பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமாகும். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்த படத்தில், பேட்மேன் கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பேலும், ஜோக்கராக ஹீத் லெட்ஜரும் நடித்திருந்தனர்
இந்த திரைப்படம் வெளியான பிறகு, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
Related Tags :
Next Story






