’பயம் உன்னை விடாது’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
’பயம் உன்னை விடாது’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
Published on

கி.மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'பயம் உன்னை விடாது'. இந்த படத்தினை எஸ்.கே.எண்டர்டெயிண்மென்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் ஆகிய நிறுவனம் தயாரித்துள்ளன. இதில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே.எஸ். ஐஸ்வர்யா பேபி, இ.ஜே. மதிவதனி, விஜய், கண்ணன், கணபதி, கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்ரா, இளஞ்செழியன் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு தயா. ரத்தினம் இசை அமைத்துள்ளார், ஒளிப்பதிவை முரளி தங்க வேலு மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சரவணன் சுப்பையா, நடிகர்கள் சவுந்தரராஜா, தங்கத்துரை, மவுரி ஆகியோர் வெளியிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com