நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு வீடு ' படத்தின் டீசர் வெளியீடு


the fun-filled Title Teaser of the SaavuVeedu film
x
தினத்தந்தி 10 Nov 2025 9:30 PM IST (Updated: 10 Nov 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சென்னை,

நடிகர் உதய் தீப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் 'சாவு வீடு'. இயக்குநர் ஆண்டன் அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஆதேஷ் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டியூனர்ஸ் இசையமைக்கிறார். துக்கம் நிகழ்ந்த வீட்டின் பின்னணியில் நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்டன் அஜித் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளநிலையில், தற்போது டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1 More update

Next Story