“மாநாடு படம் எனக்கு வந்தது… நான் மறுத்தேன்” - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்


“மாநாடு படம் எனக்கு வந்தது… நான் மறுத்தேன்” - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
x

மாநாடு படம் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியது கவனம் பெற்றுள்ளது.

சென்னை,

சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மாநாடு. கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். படத்தில் சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாகவும் இது இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது. குறிப்பாக சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் பிரச்சினை என்று ஒரு தகவலும், சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் பிரச்சினை என்று கூட சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

இந்த நிலையில், மாநாடு படம் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசிய கருத்து ஒன்று கவனம் பெற்றுள்ளது. பராசக்தி திரைப்பட விழாவில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் கூறுகையில்," மாநாடு படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த பின்னர் படத்தை நிறுத்தி விட்டார்கள். அப்போது படத்தை என்னை வைத்து பண்ணலாமா என்று கேட்டார்கள். அப்போது நான், இந்த படம் கட்டாயம் பெரிய வெற்றியை ஈட்டும். வெங்கட் பிரபு சாரிடம் இந்த படத்தை சிம்பு சாரை வைத்து எடுப்பது தான் சரி என்று சொல்லுங்கள். இந்த கதையில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினேன்” என்றார்.

1 More update

Next Story