30 ஆண்டுகளை நிறைவு செய்த "முத்து" திரைப்படம்


30 ஆண்டுகளை நிறைவு செய்த முத்து திரைப்படம்
x
தினத்தந்தி 24 Oct 2025 3:59 PM IST (Updated: 24 Oct 2025 5:38 PM IST)
t-max-icont-min-icon

ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ள 'முத்து' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சென்னை,

1995-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'முத்து'. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

'தென்மாவின் கொம்பத்' என்னும் மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தற்போதுவரை இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக படத்தில் இடம் பெற்ற 'தீபாவளி பரிசு' நகைச்சுவை காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. காமெடி காட்சிகள் ஒருபுறம் இருக்க, ரஜினியின் மாஸ் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ள 'முத்து' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்தின் பெரும் வெற்றிப் படங்களில் இப்படத்திற்கு தனி இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story