ஜேசன் சஞ்சய் இயக்கும் "சிக்மா" பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
x

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சென்னை,

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப் அறிமுகமாகியுள்ள படம் 'சிக்மா' . இந்த அதிரடி ஆக்சன் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிக்மா' படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலை வைத்துள்ளதாகவும் அதில் கேத்தரின் தரேசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த பாடலில் ஜேசன் சஞ்சய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற 23ந் தேதி மாலை 5 மணிக்கும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story