சாய் தன்ஷிகா நடித்த "யோகிடா" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சாய் தன்ஷிகா நடித்த யோகிடா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சென்னை,

பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். இவர் "மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகிடா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்பர் பெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக (இன்ஸ்பெக்டர்) நடித்துள்ளார். ஒரு கொலையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story