நடிகர் நாசர் வைத்த கோரிக்கை - மேடையில் வைத்தே மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை


நடிகர் நாசர் வைத்த கோரிக்கை - மேடையில் வைத்தே மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார்.

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா நடைபெற்றது. இதில், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதில் நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர் என திரையுலகில் கோலோச்சி வந்த நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இதுதவிர, இயல் செல்வம் விருது, இசைச் செல்வம், நாட்டியச் செல்வம், நாதஸ்வரச் செல்வம், தவில் மற்றும் மிருதங்கச் செல்வம் விருதுகள், பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன.

விருதுபெற்ற பின் பேசிய நடிகர் நாசர், அடுத்த ஆண்டும் முதலமைச்சரே விருதுகளை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சராக என்று இல்லாமல் முதல் நபராக முத்தமிழ் பேரவை விழாவிற்கு தாம் வந்து விடுவேன் என்று உறுதியளித்தார்.

1 More update

Next Story