முன்பு நாகார்ஜுனா...தற்போது சிரஞ்சீவி...தெலுங்கு ரசிகர்களை கவரும் கன்னட நடிகை


Then with Nagarjuna.. now with Chiranjeevi.. the Kannada beauty who is making waves in Telugu..
x
தினத்தந்தி 5 Aug 2025 4:45 PM IST (Updated: 5 Aug 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

கன்னட சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஆஷிகா ரங்கநாத்.

சென்னை,

கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் ''விஸ்வம்பரா'' படத்தில் நடித்து வரும் இவர் இன்று (ஆகஸ்ட் 5) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கன்னட சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஆஷிகா ரங்கநாத். 2023-ல் வெளியான கல்யாண் ராமின் 'அமிகோஸ்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், ஆஷிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

பின்னர் நாகார்ஜுனாவுடன் 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நாகார்ஜுனா மற்றும் ஆஷிகா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

தற்போது ஆஷிகா ரங்கநாத் , மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டபோதிலும், வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகாமலேயே உள்ளது.

இவ்வாறு நாகார்ஜுனா, சிரஞ்சீவி என முன்னணி நட்சத்திரங்களில் படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத்.

1 More update

Next Story