"விருதுக்காக நடிப்பதில் தவறு இல்லையே..." - லிசி ஆண்டனி

என்னை பொறுத்தவரை கடின உழைப்பும், விடாமுயற்சியும், பொறுமையும் தான் வெற்றிக்கு அடித்தளம் என்று நடிகை லிசி ஆண்டனி கூறியுள்ளார்.
"விருதுக்காக நடிப்பதில் தவறு இல்லையே..." - லிசி ஆண்டனி
Published on

சென்னை,

தூங்காநகரம்', பரியேறும் பெருமாள்', கட்டா குஸ்தி', புளூ ஸ்டார்', பொம்மை நாயகி', குற்றம் புரிந்தவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லிசி ஆண்டனி. குயிலி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது வேட்டுவம்', கட்டா குஸ்தி-2' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கூறும்போது, திரையில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும் படங்களில் என் நடிப்பு வெகுவாக பேசப்படுகிறது. அந்தவகையில் குற்றம் புரிந்தவன்', குயிலி' படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. 15 வருட திரை வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்து விட்டேன். என்னை பொறுத்தவரை கடின உழைப்பும், விடாமுயற்சியும், பொறுமையும் தான் வெற்றிக்கு அடித்தளம். அதை உறுதியாக நம்புகிறேன். அதன் அடிப்படையில்தான் என் பயணமும் இருந்து வருகிறது.

மாநில, தேசிய விருதுகள் தாண்டி, ஆஸ்கார் வரை விருதுகளை குவிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசையில் தவறு இல்லையே... எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பை கொடுக்க போராடுகிறேன். என் கனவை விரைவில் எட்டுவேன் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்'', என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com