“தெறி” ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத நிலையில், ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.
வரும் 23ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ திரைப்படம் ரீ-ரிலீஸாகும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத நிலையில், ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரீ-ரிலீஸில் அஜித்தின் “மங்காத்தா” படத்துடன் விஜய்யின் “தெறி” படம் மோத உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







