'வேண்டாம் என்றாலும் புகைப்படங்கள் எடுக்கிறார்கள்' - மேடையில் பொறுமையிழந்த 'தில்ருபா' நடிகை


They take photos even though they dont want to - Impatient Dilrupa actress
x
தினத்தந்தி 7 March 2025 8:59 AM IST (Updated: 8 March 2025 5:45 AM IST)
t-max-icont-min-icon

கிரண் அப்பாவரம் காதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் நடிகை ருக்சார் தில்லான். இவர் தெலுங்கு , இந்தி மற்றும் கன்னட படங்களில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரன் ஆண்டனி மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் ஆகதாயி , கிருஷ்ணார்ஜுன யுத்தம் மற்றும் ஏபிசிடி : அமெரிக்கன் பார்ன் கன்புஸ்டு டெசி போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார் .

2020 ஆம் ஆண்டில் இந்தியில் டில் பங்க்ரா பா லே படத்தில் நடித்தார். இவர் தற்போது நடித்துள்ள படம் தில்ருபா. கிரண் அப்பாவரம் காதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ருக்சார் தில்லான் பேசியது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை ருக்சார் தில்லான் தனது அனுமதியின்றி படங்களை எடுப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் சில புகைப்படக் கலைஞர்கள் எனது அனுமதி இன்றி எடுக்க வேண்டாம் என்று கூறும்போதுகூட புகைப்படம் எடுக்கிறார்கள். இதனால் நான் மேடையில் அசவுகரியமாக இருந்தாலும் அதை செய்கிறார்கள்' என்றார்.

1 More update

Next Story