சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை...வைரலாகும் மிருணாள் தாகூரின் பதிவு

மராத்தி மொழியிலிருந்து ஒரு சூப்பர் ஹிட் படம் தற்போது மலையாளத்தில் வெளியாக உள்ளது.
சென்னை,
படம் குப்பர் ஹிட் என்றால் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலும், மலையாளப் படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் . ஆனால் மராத்தி மொழியிலிருந்து வந்த ஒரு சூப்பர் ஹிட் படம் தற்போது மலையாளத்தில் வெளியாக உள்ளது.
இதை மிருணாள் தாகூர் தனது சமூக ஊடத்தில் தெரிவித்தார். இது குறித்த போஸ்டரைப் பகிர்ந்து கொண்ட அவர், ஒரு மராத்தி படம் வேறொரு மொழியில் வெளியாகும் காட்சியைப் பார்ப்பதில் மிகவும் பெருமைப்படுவதாக கூறினார். மராத்தி சினிமா வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என்று அவர் போஸ்டரில் தெரிவித்தார்.
மராத்தி திரைப்படமான தசாவதார் ஒரு பிளாக்பஸ்ட்ராக அமைந்தது. செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மராத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை சுபோடு களோல்கர் இயக்கியுள்ளார். பிரியதர்ஷினி இந்தல்கர் மற்றும் சித்தார்த் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் நவம்பர் 21 ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






