"இதுக்குதான் நான் அரசியலுக்கு வந்தேன்..." - நடிகர் கமல்ஹாசன்


இதுக்குதான் நான் அரசியலுக்கு வந்தேன்... - நடிகர் கமல்ஹாசன்
x

'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இதில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

இந்த விழாவில் தக் லைப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், " ரசிகர்களின் கூட்டத்தை வழிநடத்துவதில் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என்றும், இது சுமையல்ல சுகம் என்றும் நடிகர் சிம்புவை பார்த்து கூறினார். மேலும் அசோக்செல்வன் தன்னை கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்து ரசித்ததாக பேசியதை சுட்டிக்காட்டினார். இதற்காகதான் அரசியலுக்கு வந்ததாவும், முதலமைச்சராக வரவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் 40 வருஷம் ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதை, நான் மெல்ல மெல்ல செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story