சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டிய 'தக் லைப்' டிரெய்லர்


Thug Life trailer triggers age-gap debate on social media
x
தினத்தந்தி 18 May 2025 11:45 AM IST (Updated: 18 May 2025 11:58 AM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. காட்சிகள், இசை மற்றும் நடிகர்களின் நடிப்புக்காக டிரெய்லர் பாராட்டைப் பெற்றிருந்தாலும், கமல்ஹாசனும் திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட காட்சி மற்றும் கமல்ஹாசனும் அபிராமியும் முத்தமிடும் காட்சி இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

1 More update

Next Story