"வீர தீர சூரன் 2" படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி தெரிவித்த துஷாரா


வீர தீர சூரன் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி தெரிவித்த துஷாரா
x

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ படம் 2 நாட்களில் ரூ 8 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன் 2' படம் பல தடைகளை தாண்டி நேற்றுமுன்தினம் மாலை வெளியானது.

படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் 2 நாட்களில் ரூ 8 கோடி வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை இருக்கும் காரணத்தால் இப்படத்தின் வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை துஷாரா விஜயன் 'வீர தீர சூரன் 2' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "'வீர தீர சூரன் 2' படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணியின் பயணம் மிக ஸ்பெஷலானது. இந்த கதாபாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம். ஜி.வி.பிரகாஷின் இசை கலைவாணிக்கு மேஜிக்கலாக உயிர்கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story