"கார்த்தி-29" படத்தின் டைட்டில் அறிவிப்பு

கார்த்தியின் 29வது படத்தினை டாணாக்காரண் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
சென்னை,
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்திலும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து, டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 29-வது படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு "மார்ஷல்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் கடலோர கிராமம் காட்டப்பட்டுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.






