காதலை முறித்த டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடி

கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.
காதலை முறித்த டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடி
Published on

உலக அளவில் திரை பிரபலமாக இருப்பவர், டாம் குரூஸ். பல கோடி ரசிகர்களை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கிறார். டாம் குரூஸை பார்ப்பவர்கள் `இவருக்கு மட்டும் எப்படி வயதே ஆகாமல் இருக்கிறது..? என்று ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவுக்கு இளமையாக காட்சி தரும் இவரின் வயது 63. இந்த வயதிலும் தான் நடிக்கும் படங்களுக்கு டூப் போடுவதில்லை. எவ்வளவு ஆபத்தான காட்சியானாலும் அசாதாரணமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெறுவது இவரது வழக்கம்.

இவருக்குள் மீண்டும் காதல் அரும்பியிருக்கிறது. அந்த காதல் தேவதை ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் கியூபா நாட்டை சேர்ந்த நடிகை அனா டி அர்மாஸ். அவருக்கு வயது 37. இதுவரை பல ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

சாகசத்தை விரும்பும் இந்த ஜோடி, தங்கள் திருமணத்தை தனித்துவமாக்க விண்வெளியை தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாயின. கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மிமி ரோஜர், நிக்கோல் கிட்மேன், கேட்டி ஹோம்ஸ் ஆகியோருடன் டாம் குரூசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com