டாம் குரூஸின் 'மிஷன் இம்பாசிபிள் 8' - புதிய டீசர் வெளியானது


Tom Cruises Mission Impossible 8 - New Teaser Released
x

இப்படம் வருகிற மே 23-ம் தேதி வெளியாக உள்ளது

சென்னை,

ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாசிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கி இருந்தார். இந்த பாகத்தில் டாம் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.

தற்போது 'மிஷன்: இம்பாசிபிள் 8' உருவாகி வருகிறது. இப்படம் வருகிற மே 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story