2025-ல் அதிக சம்பளம் வாங்கிய டாப்-10 தமிழ் நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய டாப்-10 ஹீரோக்களை தொடர்ந்து காணலாம்.
சென்னை,
வணிக ரீதியாக ஒரு சினிமா பெறும் வெற்றியை பொறுத்து, அந்த படத்தில் நடித்த ஹீரோவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய டாப்-10 ஹீரோக்களை தொடர்ந்து காணலாம்.
முதலிடம் - விஜய்: திரைத் துறையில் இருந்து அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படம் ஜனநாயகன். இதுவரை ரூ.250 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர், 69-வது படமான ஜனநாயகனில் சுமார் ரூ.275 கோடியை சம்பளமாக பெற்றார் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
2-வது இடம் - ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் திரைத் துறையில் நீண்ட காலம் பயணித்து வரும் இவர், குழந்தை முதல் முதியவர் வரையிலான ரசிகர்கள் பட்டாளத்தையே தன்னகத்தில் வைத்துள்ளார். அதனால், அவரது சம்பளமும் எப்போதுமே உயர்ந்தே காணப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
3-வது இடம் - அஜித்குமார்: ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், இப்போது சினிமாவையும் தாண்டி கார் ரேசிலும் கலக்கி வருகிறார். ரீல் ஹீரோவில் இருந்து ரியல் ஹீரோவாகவும் ஜொலித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.120 கோடி முதல் ரூ.180 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
4-வது இடம் - கமல்ஹாசன்: உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன், 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். தற்போது இவர் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
5-வது இடம் - சூர்யா: நடிப்பில் பட்டையை கிளப்பும் இவர், ஒரு படத்திற்கு ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
6-வது இடம் - தனுஷ்: தமிழ் சினிமாவையும் தாண்டி பான் இந்தியா படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது ஒரு படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
7-வது இடம் - சிவகார்த்திகேயன்: அமரன் படம் வெற்றிக்கு பிறகு இவருடைய சம்பளம் நன்றாக உயர்ந்திருக்கிறது. இவரது சம்பளம் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
8-வது இடம் - விஜய் சேதுபதி: சினிமாவில் கேப் விடாமல், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், ஹீரோவாக ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
9-வது இடம் - கார்த்தி: தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகரான கார்த்தி, ஒரு படத்திற்கு ரூ.25 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
10-வது இடம் - சிலம்பரசன்: 'மாநாடு' வெற்றிக்கு பிறகு இவரது சம்பளம் உயர்ந்துவிட்டது. தற்போது ரூ.18 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
டாப்-10-ஐ தாண்டி, அடுத்த இடத்தில், அதாவது 11-வது இடத்தில் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்ற இவர், ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.






