டொவினோ தாமஸுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்

''நரிவேட்டை'' படத்தை அடுத்து, நடிகர் டோவினோ தாமஸ், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியுடன் இணைந்திருக்கிறார்.
சென்னை,
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தில் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார்.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ''நரிவேட்டை'' படத்தை தொடர்ந்து, நடிகர் டோவினோ தாமஸ், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இதற்கு முன்பு குயின், ஜன கண மன, மற்றும் மலையாளி பிரம் இந்தியா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதில் காதாநாயகியாக டிராகன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கயாடு லோஹர் இணைந்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் விஜயராகவன், தெலுங்கு நடிகர் சிவகுமார், சுதீர் கரமனா, ஜானி ஆண்டனி, டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, பிரசாந்த் அலெக்சாண்டர், ஜெயகிருஷ்ணன், வினோத் கெடாமங்கலம், மற்றும் பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
Related Tags :
Next Story






