'மெட்ராஸ் மாபியா கம்பெனி' படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் ஆனந்தராஜ் நடித்துள்ள ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
'மெட்ராஸ் மாபியா கம்பெனி' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

'பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி' போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

வடசென்னை பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை இப்படத்தை தயாரித்துள்ளனர். முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 14ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com