'திரிஷா பிறந்தநாள்' - கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிட்ட 'விஸ்வம்பரா' படக்குழு

25 ஆண்டுகளாக சினிமாத்துறையில் கோலோச்சி வருபவர் நடிகை திரிஷா.
சென்னை,
இன்று திரிஷாவின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'விஸ்வம்பரா' படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தில் திரிஷா 'அவனி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
25 ஆண்டுகளாக சினிமாத் துறையில் கோலோச்சி வருபவர், நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.
திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் 'ஐடென்டிட்டி', தமிழில் 'விடாமுயற்சி', சமீபத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இது மட்டுமில்லாமல் இன்னும் 3 படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கின்றன.
அதில் ஒன்று 'விஸ்வம்பரா'. சிரஞ்சீவிக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். அந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது ஆயுத பூஜையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படத்திலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.






