திரிஷா அரசியலுக்கு வரப்போவதில்லை - அம்மா விளக்கம்


Trisha’s mother denies her daughter making political entry
x

திரிஷா தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது.

'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தசூழலில், திரிஷா சினிமாவைவிட்டு விலகி அரசியலுக்கு செல்ல உள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், திரிஷவின் அம்மா அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "திரிஷா அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் தொடர்வார். இது தொடர்பாக பரவி வரும் செய்திகள் எதுவும் உணமையில்லை' என்றார்.

1 More update

Next Story